இன்று ஒரு தமிழ் சொல் அறிவோம் 2 - ஐயவி



ஐயவி = கடுகு, வெண் சிறு கடுகு 

இலக்கியப்  பயன்பாடு 

ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி
(புறநானூறு - 281; அரிசில் கிழார்)

ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் (குறுந்தொகை 50)

அறுகு நிம்பம் அடிசில் அரிசனஞ்
சிறுகும் ஐயவி செம்பஞ்சின் வித்திவை
(கந்தபுராணம் - 789)

பூணா ஐயவி தூக்கிய மதில - (பதிற்றுப்பத்து 16-4;)

நெடுங்கால் ஐயவி (மதுரைக்காஞ்சி 287)

அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை - (மணிமேகலை 7-73;)

வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புறநானூறு - 296)

நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட்குறுகி
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து… (நற்றிணை - 370)



ஐயவி பயன்பாடு :

அரிசில் கிழார் எழுதிய புறநானூறு பாடலில், போர்க்  காலங்களில் வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு மருந்தாக கடுகை (கடுகு எண்ணெய்) பயன்படுத்தியுள்ளார்கள். கடுகு எண்ணையை புண் ஆற்றவும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தும் வழக்கம் தற்பொழுதும் உள்ளது. வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் கடுகு எண்ணையை சமையலுக்கும் பயன்படுத்தும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

போரின்போது சமாதான அடையாளமாக ஐயவி புகைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.

குழந்தை பெற்ற தாயை ஐயவி பூசி, ஐயவிப் புகை காட்டும் வழக்கம் இருந்திருக்கிறது.

Comments