இன்று ஒரு செய்யுள் அறிவோம் - 2 - மூதுரை


இன்று ஒரு செய்யுள் ஆக ஔவையார் இயற்றிய மூதுரை செய்யுளை காண்போம்.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.

- மூதுரை (ஔவையார்)


பதவுரை:

நெல்லுக்கு - நெற்பயிருக்கு, இறைத்த நீர் - இறைக்கப்பட்ட தண்ணீரானது, வாய்க்கால் வழி ஓடி - கால்வாய் வழியாகச் சென்று, ஆங்கு - அவ்விடத்திலுள்ள புல்லுக்கும் பொசியும் - புல்லுகளுக்கும் கசிந்தூறும்; (அதுபோல), தொல் உலகில் - பழைமையாகிய இவ்வுலகத்தில், நல்லார் ஒருவர் உளரேல் - நல்லவர் ஒருவர் இருப்பாராயின், அவர் பொருட்டு - அவர் நிமித்தமாக, எல்லார்க்கும் மழை பெய்யும் - அனைவருக்கும் மழை பெய்யா நிற்கும்.

பொழிப்புரை:

நல்லோரைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர்.

இன்று ஒரு செய்யுள் அறிவோம் - 1

இன்று ஒரு தமிழ் சொல் அறிவோம் - 1

Comments